For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுகவினர் மீது திமுகவினர் பயங்கர தாக்குதல்கரூரில் பீதி: பள்ளிகள் மூடல்- பஸ்கள் நிறுத்தம்

By Staff
Google Oneindia Tamil News

கரூர்:கரூரில் முதல்வர் கருணாநிதியின் கொடும்பாவியை எரித்த அதிமுகவினர் மீது திமுகவினர் சோடா பாட்டில்கள், உருட்டுக் கட்டைகளுடன் பயங்கர தாக்குதல் நடத்தினர்.

இதில் இரு தரப்பிலும் பலருக்கும் ரத்தக் காயம் ஏற்பட்டது. பல அதிமுகவினரின் மண்டை உடைந்தது.

அதிமுக அலுவலகத்தை இடிக்கப் போவதாகவும், ஜெயலலிதா வீட்டில் சோதனை நடக்கப் பேவாதாகவும் வெளியான தகவல்களை கண்டித்தும், கொடநாடு எஸ்டேட்டில் சோதனை நடந்ததை எதிர்த்தும், ஜெயலலிதா மது அருந்துவதாக இரட்டை அர்த்தத்தில் கருணாநிதி அறிக்கை விட்டதை கண்டித்தும் மாநிலம் முழுவதும் அதிமுகவினர் பேராட்டம் மற்றும் வன்முறையில் இறங்கியுள்ளனர்.

இன்று காலை கரூர் தாலுகா அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்ட அதிமுகவினர் முதல்வர் கருணாநிதியை திட்டி கோஷம் எழுப்பினர். மேலும் அவரது கொடும்பாவியையும் எரித்தனர்.

Gang on attack

கொடும்பாவி எரிந்து கொண்டிருந்த நிலையில் அந்தக் கூட்டத்தினர் மீது சோடா பாட்டில் வந்து விழுந்து சிதறின. இதையடுத்து அதிமுகவினர் அதிர்ந்தனர்.

அடுத்து உருட்டுக் கட்டைகளுடன் அங்கு வந்த திமுகவினர் அவர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் அதிமுகவினர் சிதறி ஓடினர். பல அதிமுகவினருக்கு மண்டை பிளந்தது.

கலைந்து ஓடிய அதிமுகவினரும் விரட்டி விரட்டி அடித்த திமுகவினரும் கடைகள் மீதும், அந்த வழியே வந்த பஸ்கள் மீதும் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தினர்.

Injured ADMK men

பல இரு சக்கர வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.

இதையடுத்து அப் பகுதியில் கடைகள் மூடப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் இருந்து குழந்தைகளை அழைத்துச் செல்ல பெற்றோர் பள்ளிகளை நோக்கி படையெடுத்தனர்.

இவர்களது சண்டையால் பொது மக்கள் பீதியில் அலறியபடி ஓடினர்.

இந்த மோதலால் கரூரில் பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுவிட்டது.

பேராட்டத்துக்கு தலைமை தாங்கிய அதிமுக முன்னாள் எம்பியும் மாஜி மந்திரியுமான சின்னச்சாமியையயும் கரூர் எம்எல்ஏ செந்தில் பாலாஜியையும் போலீசார் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இரு தரப்பினரும் மோதிக் கொண்டதில் கரூர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் நாகராஜன், மாவட்ட மாணவரணிச் செயலாளர் பிரபு ஆகியோர் பலத்த காயமடைந்துள்ளனர்.

கருணாநிதியின் கொடும்பாவி எரிக்கப்பட்டதற்கு பதிலடியாக ஜெயலலிதாவின் கொடும்பாவியை திமுகவினர் எரித்து வருகின்றனர்.

வன்முறையைத் தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி உள்ளிட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அனைவரும் 15 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X