வைகுண்டராஜன் நிறுவனங்களில் மீண்டும் சோதனை
திருநெல்வேலி:வி.வி.மினரல்ஸ் என்ற நிறுவனத்தின் அதிபர் வைகுண்டராஜனுக்குச் சொந்தமான நிறுவனங்களில் இன்று மீண்டும் அதிரடி சோதனை மற்றும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
வி.வி. மினரல்ஸ் நிறுவனம் மூலம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டக் கடலோர மணலில் உள்ள தாதுப் பொருட்களைப் பிரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலை வைகுண்டராஜன் நடத்தி வருகிறார்.
ஜெயா டிவி ன் பெரும்பாலான பங்குகளை இவர்தான் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. வைகுண்டராஜனை மிரட்டி அவரிடம் உள்ள ஜெயா டிவி பங்குகளை வாங்க திமுக முயல்வதாக சமீபத்தில் கூட ஜெயலலிதா குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் வைகுண்டராஜன் நிறுவனங்களில் சமீபத்தில் அதிரடி சோதனை நடந்தது. தற்போது இன்று காலை முதல் மீண்டும் சோதனை மற்றும் ஆய்வுகள் நடந்து வருகின்றன.
தொழிலாளர் நலத்துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் கணி வளத்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் கூட்டாக ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications