டவுன் பஸ் கவிழ்ந்து 30 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி அருகே நகரப் பேருந்து கவிழ்ந்து விழுந்ததில் 30 பயணிகள் காயமடைந்தனர்.
திருச்சி அருகே உள்ள மாத்தூரிலிருந்து, சத்திரம் பேருந்து நிலையத்திற்கு அரசு நகரப் பேருந்து வந்து கொண்டிருந்தது. கும்பக்குடி என்ற இடத்தில் பேருந்து வந்தபோது, எதிரே ஒரு ஆடு குறுக்கில் ஓடியது.
ஆட்டின் மீது பேருந்து மோதி விடாமல் இருக்க பேருந்தை திருப்பினார் டிரைவர். அப்போது பேருந்து நிலை தடுமாறி கவிழ்ந்து விழுந்தது.
இதில், பேருந்தில் பயணம் செய்த 10 பள்ளி மாணவர்கள் உள்பட 30 பேர் படுகாயம் அடைந்தனர்.












Click it and Unblock the Notifications