அதிமுக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்ட அதிமுக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்கப்பட்டது. இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.
முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசியதாக கூறி அதிமுகவினர் நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டம் பல இடங்களில் வன்முறையாக மாறியது. திமுகவினரும், அதிமுகவினரும் சரமாரியாக பல இடஙகளில் மோதிக் கொண்டனர். கரூரில் உச்சகட்ட வன்முறை அரங்கேறியது.
இந்த நிலையில் நேற்று இரவு தூத்துக்குடியில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகம் மீது சிலர் பெட்ரோல் குண்டு வீசித் தாக்கினர். இதில் அலுவலகம் ஓரளவு சேதமடைந்தது. அலுவலகத்திற்குள் இருந்த பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன
இதைக் கண்டித்து அலுவலகம் முன்பு இன்று காலை அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த சம்பவம் காரணமாக தூத்துக்குடியில் இன்று காலை பதட்டம் நிலவியது.












Click it and Unblock the Notifications