4 ஆண்டுகளாக ஆட்டம் காட்டும் காதலர்கள்துப்பு கொடுத்தால் ரூ. 50,000 பரிசு
சென்னை: நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தலைமறைவான காதல் ஜோடியைக் கண்டுபிடிக்க சரியான துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.50,000 பரிசு வழங்கப்படும் என சிபிஐ அறிவித்துள்ளது.
விழுப்புரத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து. இவரது மகள் ஜான்சி ராணி. 15 வயதாகும் இவர் நான்கு வருடங்களுக்கு முன் 10ம் வகுப்பு படிக்கும்போது தேர்வு எழுத சென்றவர் வீடு திரும்பவில்லை.
அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. அதிலும் பயன் இல்லை. இதையடுத்து நீதிமன்றத்தை நாடினார் வீரமுத்து. அதில், சிபிஐயிடம் வழக்கை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கினர். அதில், பக்கத்து வீட்டில் வசித்து வந்த அகமது பாஷா(24) என்பவரும், ஜான்சி ராணியும் காதலித்தது தெரிய வந்தது.
பாஷாவுடன்தான் ஜான்சா ராணி தலைமறைவானதும் தெரிய வந்தது. இருவரும் சென்னையில் குடும்பம் நடத்தி வரக் கூடும் என சிபிஐ அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து இருவரையும் கண்டுபிடிக்க சரியான துப்பு தருகிறவர்களுக்கு ரூ.50,000 பரிசு வழங்கப்படும் என சிபிஐ அறிவித்துள்ளது. அவர்களுடைய புகைப்படங்களை பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் ஒட்டி வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications