உடல் தானம் செய்தார் கனிமொழி
சென்னை:முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி, அமைச்சர் பூங்கோதை ஆகியோர் தங்களது உடல்களைத் தானம் செய்வதாக அறிவித்துள்ளனர்.
உடல் உறுப்பு தானம் செய்தோருக்கு சென்னையில் பாராட்டு விழா நடந்தது. ஆளுநர் மாளிகையில், இந்த பாராட்டு விழா நடந்தது. இதில் ஆளுநர் பர்னாலா, கவிஞர் கனிமொழி, சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், உடல் உறுப்புகளைத் தானம் செய்த 20 குடும்பத்தினர் வரவழைக்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு பர்னாலா பாராட்டுப் பத்திரத்தை வழங்கினார்.
நிகழ்ச்சியில், கனிமொழியும், பூங்கோதையும் தங்களது இறப்புக்குப் பின்னர் உடலை தானம் செய்வதாக அறிவித்தனர். இதையடுத்து அதுதொடர்பான உறுதிமொழியை மேடையில் வாசித்தனர். அவர்ளுக்கு உடல் தானம் தொடர்பான உறுதிமொழிப் பத்திரத்தை நடிகை ரேவதி வழங்கினார்.
கனிமொழி, பூங்கோதை ஆகியோர் உடல் தானம் செய்வதாக அறிவித்ததற்கு ஆளுநர் பர்னாலா பாராட்டு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications