கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றஇலங்கை உச்சநீதிமன்றம் தடை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:கொழும்பு நகரிலிருந்து தமிழர்களை வெளியேற்ற இலங்கை உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கொழும்பில் வசித்து வரும் தமிழர்களை அங்கிருந்து வெளியேற்றி சொந்த ஊர்களுக்கு அனுப்பும் வேலையில் கொழும்பு போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சர்வதேச மனித உரிமைகளை மீறும் செயல் என்றும், தமிழர்களை ஒட்டுமொத்தமாக இனப்படுகொலை செய்ய இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கடும் எதிர்ப்புகள் எழுந்தன.

கடந்த 2 நாட்களில் மட்டும் கொழும்பில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்த 300க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொழும்பிலிருந்து வெளியேற்றப்பட்டு, போர் நடந்து வரும் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர்.

இந்த நிலையில் கொழும்பு போலீஸாரின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தக் கோரி மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் என்ற தனியார் அமைப்பு சார்பில் இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கொழும்பு போலீஸாரின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதுகுறித்து மாற்று கொள்கைகளுக்கான மையத்தைச் சேர்ந்த ஒரு நிர்வாகி கூறுகையில்,

கொழும்பு ஐஜி, வெல்லவத்தை, பேட்டை, பரியகோடா, வட்டாலா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள், தமிழர்களை வெளியேற்றுவற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

உடனடியாக இந்த நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் எனவும், ஜூன் 22ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றார்.

நேற்று மட்டும் கொழும்பில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்த 85 பெண்கள், உள்ளிட்ட 376 பேரை வவுனியா, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திரிகோணமலை ஆகிய பகுதிகளுக்கு கொழும்பு போலீஸார் அரசுப் பேருந்துகளில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

போலீஸாரின் இந்த நடவடிக்கை பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களை சம்பாதித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+