அதிமுக எம்.எல்.ஏ மகளை மணந்த வாலிபர்போலீஸ் பிரிக்கப் பார்ப்பதாக புகார
கரூர்: அதிமுக எம்.எல்.ஏவின் மகளைக் கல்யாணம் செய்து கொண்ட தன்னிடமிருந்து, தனது மனைவியைப் பிரிக்க போலீஸ் துணையுடன் எம்.எல்.ஏ முயற்சிப்பதாக எம்.எல்.ஏ மகளை மணந்தவர் புகார் கூறியுள்ளார்.
வேடசந்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஆண்டிவேல். இவரது மகள் சத்யா (20). ஆசிரியர் பயிற்சியை முடித்துள்ளார். இந்த நிலையில், தோப்புப்பட்டி என்ற ஊரைச் சேர்ந்த ரங்கசாமியின் மகன் கிருஷ்ணமூர்த்தியை காதலித்து வந்தார் சத்யா. கடந்த 3 ஆண்டுகளாக இவர்களின் காதல் நீடித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 5ம் தேதி இருவரும் திருச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் வைத்து ரகசிய பதிவு திருமணம் செய்து கொண்டனர். மேலும், எம்.எல்.ஏவால் தங்களுக்கு ஆபத்து நேரிடும், எனவே பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
ஆனால் பாதுகாப்பு வழங்குவதற்குப் பதில், எம்.எல்.ஏ மகளை விட்டு விலகி விடுமாறு அங்கிருந்த இன்ஸ்பெக்டர் வரலட்சுமி, உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி, தலைமை காவலர் ராணி ஆகியோர் கிருஷ்ணமூர்த்தியை மிரட்டியதாக கூறப்படுகிறது.
சர்ச்சையில் சிக்கியுள்ள இன்ஸ்பெக்டர் வரலட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி ஆகியோர் மீது ஏற்கனவே தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. வரும் 8ம் தேதி அந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.
இந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏவுக்கு ஆதரவாக செயல்பட்டு, கல்யாணம் செய்து கொண்ட காதல் தம்பதியைப் பிரிக்க முயன்றதாக அவர்கள் மீது புகார் எழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications