மதுரை மேற்கு 39 பேர் மனு தாக்கல்
மதுரை:மதுரை மேற்கு தொகுதி இடைத் தேர்தலில் மொத்தம் 39 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது.
மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 1ம் தேதி தொடங்கியது. நேற்று மாலையுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது.
அதிமுக சார்பில் செல்லூர் ராஜு, காங்கிரஸ் சார்பில் கே.எஸ்.கே.ராஜேந்திரன், தேமுதிக சார்பில் சிவமுத்துக்குமாரன், பாஜக சார்பில் சீத்தாராமன் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். மேற்று மாலை முடிவடைந்த கால அவகாசத்திற்குப் பின்னர் மொத்தம் 39 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இவர்களில் 10 பேர் அரசியல் கட்சிகள் சார்பில் மனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்கள் மற்றும் மாற்று வேட்பாளர்கள் ஆவர். 29 பேர் சுயேச்சைகள்.
இன்று மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. அதன் பின்னர் நாளையும், நாளை மறுநாளும் மனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ள அவகாசம் அளிக்கப்படும். 11ம் தேதி மாலை 3 மணி வரை மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அதன் பின்னர் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் தெரிய வரும்.
மனுத் தாக்கல் செய்துள்ள 39 வேட்பாளர்கள் விவரம்
செல்லூர் ராஜு (அதிமுக), எம்.எஸ்.பாண்டியன் (அதிமுக மாற்று), கே.எஸ்.கே.ராஜேந்திரன் (காங்கிரஸ்), ராமன் (காங்கிரஸ் மாற்று), சிவமுத்துக்குமரன் (தேமுதிக), ராமர் (தேமுதிக மாற்று), சசிராமன் என்கிற சீத்தாராமன் (பாஜக), சுரேந்திரன் (பாஜக மாற்று), மகாலிங்கம் என்கிற சிற்றறசு (புதிய தமிழகம்), சுவி செல்வன் (மக்கள் மாநாட்டுக் கட்சி).
சுயேச்சை வேட்பாளர்கள் - தினகரன் (பார்வர்ட் பிளாக்-தினகரன்), பத்மராஜன், தூதை செல்வம், செந்தில்குமார், கிறிஸ்துதாஸ், கே.பி.ராஜா, சையத் ஆலித் ஆயிஷா, வைரம், முத்துச்சாமி, நூர்முகம்மது, சந்திரசேகரன், மகுடபதி, துர்கா ராணி, புயல் பொன்னையா, ராஜு, ஜான் பிரிட்டோ செல்வராஜ், போஸ், பால் பாண்டியன், பழனிகணேஷ், ஒய்யனனன், பூமிநாதன், மூவேந்தன், சந்திரசேகரன், ஆரோக்கியம், மன்மதன், பாண்டியன், ரவிச்சந்திரன், வடிவேல், விமல்ராஜ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications