மதுரை தேர்தல்:160 ஏட்டுக்கள் அதிரடி டிரான்ஸ்பர்

Subscribe to Oneindia Tamil

மதுரை:மதுரை மேற்கு இடைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 160 தலைமைக் காவலர்களை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர்கள் வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் தீவிரமாக உள்ளது. இதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

காவல்துறை அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஒட்டுமொத்தமாக 160 தலைமைக் காவலர்கள் தற்போது இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மேற்குத் தொகுதிக்குட்பட்ட 7 காவல் நிலையங்களில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தவர்கள் இவர்கள். இவர்களை வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி அனைவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக 3 உதவி ஆணையர்கள், 15 சப் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.

ஒரு தேர்தலில், ஒட்டுமொத்தமாக அதிக அளவிலான போலீஸார் இடமாற்றம் செய்யப்பட்டது தமிழகத்திலேயே இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+