குவாத்ரோச்சியை இந்தியாவுக்கு நாடு கடத்தஅர்ஜென்டினா கோர்ட் மறுப்பு
எல்டோரடோ:போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள இத்தாலிய தொழிலதிபர் ஒட்டாவியோ குவாத்ரோச்சியை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்ற சிபிஐயின் கோரிக்கையை அர்ஜென்டினா நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
போபர்ஸ் பீரங்கி வாங்கியதில் குவாத்ரோச்சி நடந்த ஊழலில் குவாத்ரோச்சிக்கு முக்கியப் பங்கு இருப்பதாக சிபிஐ கூறுகிறது. போபர்ஸ் வழக்கில் குவாத்ரோச்சி முக்கியக் குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளார்.
![]() |
போபர்ஸ் பீரங்கிகளை வாங்கியதில் இடைத்தரகராக செயல்பட்ட குவாத்ரோச்சி 7 பில்லியன் டாலர் பணத்தை லஞ்சமாக பெற்றார் என்பது சிபிஐயின் குற்றச்சாட்டு. இக்குற்றச்சாட்டை குவாத்ரோச்சி மறுத்துள்ளார்.
அவரைக் கைது செய்ய சிபிஐ பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவிலிருந்து குவாத்ரோச்சியை இந்தியாவுக்குக் கொண்டு வர முயற்சிக்கப்பட்டது. ஆனால் அது தோல்வி அடைந்தது.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் அர்ஜென்டினாவில் கைது செய்யப்பட்டார் குவாத்ரோச்சி. இதையடுத்து அவரை நாடு கடத்திக் கொண்டு வர சிபிஐ நடவடிக்கையில் இறங்கியது.
இதுதொடர்பாக அர்ஜென்டினாவின் எல்டோரடோ நகர நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த 2 நாட்களாக அர்ஜென்டினா நீதிமன்றம் விசாரித்து வந்தது.
விசாரணையின் இறுதியில், குவாத்ரோச்சியை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதிக்க முடியாது என்று நீதிபதி மரியோ ஹசிரா டோய் அறிவித்தார். இதற்கான காரணத்தை அவர் கூறவில்லை.
இந்த தீர்ப்பு குறித்து இந்தியாவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மிகுவல் அல்மொய்ரா கூறுகையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து அர்ஜென்டினா உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்படும் என்றார்.













Click it and Unblock the Notifications