கோவை புடிக்கலை.. என்ஜினீயர் மனைவி தற்கொலை
கோவை: கோவையில் வசிக்கப் பிடிக்காமல், மீண்டும் பெங்களூருக்கேத் திரும்பலாம் என்று கூறியதை கணவர் கேட்காததால், மனம் உடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை கேகே புதூரில் வசித்து வருபவர் ஜெயக்குமார்(32). இவர் ஒரு மெக்கானிக்கல் என்ஜினீயர். இவரது மனைவி வானதி(29). ஜெயக்குமார் தனது மனைவியுடன் கடந்த 7 ஆண்டுகளாக பெங்களூரில் வசித்து வந்தார்.
இந்நிலையில் ஜெயக்குமாருக்கு வேலை பார்த்து வந்த நிறுவனம் கோவைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து ஜெயகுமார் தனது குடும்பத்துடன் கோவைக்கு வந்தார்.
பெங்களூர் வாசத்திற்குப் பழக்கப்பட்டு விட்ட வானதிக்கு கோவையில் இருக்க முடியவில்லை. எனவே புலம்பிக் கொண்டே இருந்தார். வேலையை விட்டு விட்டு பேசாமல் பெங்களூருக்கே போய் விடலாம் என கணவரை அனத்தி வந்தார்.
ஆனால் வேலைய விட முடியாது என்று ஜெயக்குமார் கூறி விட்டார். இதனால் மனம் உடைந்தார் வானதி. தனது பேச்சை கணவர் கேட்கவில்லையே என்ற ஆத்திரத்தில் தூக்குப் போட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.
ஊர் பிடிக்கவில்லை என்று கூறி ஒரு படித்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications