சூடாகும் மதுரை தேர்தல் களம்தலைவர்கள் குவிகிறார்கள்
மதுரை: மதுரை மேற்கு தொகுதி இடைத் தேர்தல் களம் சூடாக ஆரம்பித்துள்ளது. பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் மதுரையில் பிரசாரத்திற்காக குவியவுள்ளனர்.
மதுரை மேற்குத் தொகுதியில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. அதிமுக சார்பில் செல்லூர் ராஜு, காங்கிரஸ் சார்பில் ராஜேந்திரன், தேமுதிக சார்பில் சிவமுத்துக்குமாரன், பாஜக சார்பில் சீத்தாராமன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இவர்கள் தவிர 25 சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர். நான்கு முனைப் போட்டி என்றாலும் கூட அதிமுக, காங்கிரஸ் இடையேதான உண் மையான போட்டி நிலவுகிறது.
காங்கிரஸ் வேட்பாளருக்காக முதல்வர் கருணாநிதி வருகிற 23ம் தேதி செல்லூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரசாரம் செய்கிறார்.
காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி 10 நாள் முகாமிட்டு பிரசாரம் செய்யப் போவதாக கூறியுள்ளார்.
அதிமுக வேட்பாளர் ராஜுவை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா 21ம் தேதி பிரசாரம் செய்கிறார். மதிமுக சார்பில் வைகோவும் பிரசாரம் செய்யவுள்ளார்.
தேமுதிக வேட்பாளர் சிவமுத்துக்குமாரனை ஆதரித்து அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் 18ம் தேதி முதல் ஒரு வாரம் தீவிரப் பிரசாரம் செய்கிறார். விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதாவும் பிரசாரத்தில் பங்கேற்கிறார்.
பாஜக மாநில தலைவர் இல.கணேசன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எம்பி திருநாவுக்கரசர் ஆகியோரும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு திரட்ட அடுத்த வாரம் மதுரை செல்கின்றனர்.
புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி 24ம் வரை தம் கட்சி வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்கிறார்.
அரசியல் கட்சிகளி்ன் தலைவர்கள் அடுத்தடுத்து அணல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதால் மதுரை தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications