ஸ்டாலின் விழா பந்தலில் விபத்து-2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திருச்சி:திருச்சி அருகே லால்குடியில், அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட விழாவின் பந்தலைப் பிரிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.
லால்குடியில் வெள்ளிக்கிழமை உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதற்காக பிரமாண்ட பந்தல் போடப்பட்டிருந்தது.
நேற்று பந்தலையும், பிரமாண்டமாக வைக்கப்பட்டிருந்த பேனர்கள், கட் அவுட்களையும் பிரிக்கும் வேலை நடந்தது. அப்போது இலியாஸ் (18)என்பவர் மேலிருந்து கீழே விழுந்து இறந்தார். வெங்கடேசன் என்பவர் மின்சாரம் தாக்கி பலியானார்.












Click it and Unblock the Notifications