சிக்குன்குனியா தடுப்புக்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு
சென்னை: தமிழகத்தில் சிக்குன்குனியா காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளுக்காக ரூ.7 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறி்ப்பில்,
கேரளாவில் பரவியுள்ள சிக்குன்குனியா காய்ச்சல் தமிழகத்திற்கும் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து முதல்வர் கருணாநிதி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரனுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அமைச்சர்களும், அதிகாரிகளும் இந்நோய் பரவாமல் தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்வரிடம் விளக்கினர்.
சிக்குன்குனியா குறித்து மக்களுக்கு எச்சரிக்கை செய்திடும் வகையில் அதிக விளம்பரங்களை செய்திட வேண்டும் என அப்போது முதல்வர் அறிவுறுத்தினார்.
இதையும் தாண்டி சிக்குன்குனியா தமிழகத்திற்கு வந்துவிட்டால், அதற்கு தேவையான மருந்துகளை முன்கூட்டியே வாங்கி தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இந்நோய் நிரந்தரமாக தமிழகத்திற்கு வராத அளவிற்கு தடுப்பு நடவடிக்கை எடுப்பதற்காக கிராமங்களில் கொசுக்களை அறவே ஒழிக்க, 3,850 தற்காலிக் களப்பணியாளர்களை நியமிக்க முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
இதற்காக அரசு சார்பில் ரூ.7 கோடியே 10 லட்சம் நிதியினை முதல்வர் ஒதுக்க ஆணையிட்டுள்ளார் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications