கணவனை உதறி, கள்ளக் காதலனைநம்பி நட்டாற்றில் விடப்பட்ட பெண்
கரூர்:கள்ளக் காதலனை நம்பி, கட்டிய கணவன், குழந்தைகளை உதறி விட்டு வீட்டை விட்டு வெளியேறிய பெண், இப்போது இருவராலும் புறக்கணிக்கப்பட்டு நட்டாற்றில் விடப்பட்டார்.
கரூர் அருகே உள்ள வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். ஆடிட்டர் ஒருவரிடம் உதவியாளராக இருக்கிறார். இவருக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த மீனாட்சி என்கிற ஹேமமலானி என்பவருடன் கல்யாணம் நடந்தது.இவர்களுக்கு சக்திபாலாஜி, ராகுல் என்ற மகன்கள் உள்ளனர்.
பாஸ்கர் அடிக்கடி வெளியூர் பயணம் மேற்கொள்வார். இந்நிலையில் மீனாட்சிக்கும் நகை செய்யும் தொழிலாளியான செந்தில்குமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
பாஸ்கர் அடிக்கடி வெளியூர் போய் விடுவது அவர்களுக்கு வசதியாகப் போய் விட்டது. இதைப் பயன்படுத்திக் கொண்டு மீனாட்சியும், செந்தில்குமாரும் அடிக்கடி வெளியூர்களுக்குப் போவது, சினிமாவுக்குப் போவது, தனிமையில் சந்திப்பது என இருந்துள்ளனர்.
இந்த நிலையில், மீனாட்சி ஒரு நாள் செந்தில்குமாருடன் ஓடிப் போனார். இது தெரியாமல் அவர் காணாமல் போய் விட்டதாக கருதி பல இடங்களிலும் தேடியுள்ளார் பாஸ்கர். கிடைக்காத காரணத்தால், கரூர் எஸ்பி சுகுமாரை சந்தித்துப் புகார் கொடுத்தார்.
போலீஸார் மீனாட்சியைத் தேடினர். அப்போதுதான், செந்தில்குமாரும், மீனாட்சியும் திருப்பூரில் வசித்து வருவது தெரிய வந்தது.
இதையடுத்து இருவரையும் கரூருக்கு அழைத்து வந்தனர் போலீஸார். பாஸ்கரையும் அழைத்தனர். தனது மனைவி வேறு ஒருவருடன் குடும்பம் நடத்தி வந்ததை அறிந்த பாஸ்கர், இவரை எனது மனைவியாக ஏற்க முடியாது என்று கூறி விட்டுச் சென்ற விட்டார்.
இந்த நிலையில் திடீரென செந்தில்குமாரும், மீனாட்சியை ஏற்க முடியாது என்று கூறி விட்டார். இதனால் மீனாட்சியின் நிலை கேள்விக்குறியானது.
குழம்பிப் போன போலீஸார், மீனாட்சியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications