இந்தியன் விமான ஊழியர்கள் ஸ்டிரைக்:நாடு முழுவதும் விமான சேவை பாதிப்பு
சென்னை: இந்தியன் (முன்னாள் இந்தியன் ஏர்லைன்ஸ்) விமான நிறுவன ஊழியர்கள் பல்வேறு கோரிகைகளை வலியுறுத்தி திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் நாடு முழுவதும் விமான நிலையப் பணிகள் பாதிக்கப்பட்டு விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
விமான நிலைய ஊழியர்கள் சம்பள உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பல மாதங்களாக வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு முதல் இந்தியன் விமான நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் விமான நிலையப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இரவில் சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. இன்றும் அனைத்து விமானங்களும் தாமதமாக சென்று கொண்டுள்ளன.
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு நேற்று நள்ளிரவு 12.50க்கு புறப்பட்டிருக்க வேண்டிய இந்தியன் விமானம் (ஐசி-555) இன்னும் கிளம்பவில்லை.












Click it and Unblock the Notifications