நீந்தி விளையாடும் 15 மாத குழந்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை:ஒன்னே கால் வயதே ஆகும் குழந்தை 4 மீட்டர் தொலைவுக்கு நீச்சல் குளத்தில் நீந்தி புதிய சாதனை படைத்துள்ளது.

சென்னை திருவல்லிகேணியை சேர்ந்தவர் கமலாகர். இவரது மனைவி விஜயலட்சுமி. இத்தம்பதிக்கு மகரந்த் என்ற குழந்தை உள்ளது. இக்குழந்தை பிறந்து 15 மாதங்கள்தான் ஆகிறது.

Magaranth

இந்த நிலையில் மகரந்த் நீச்சல்குளத்தில் 4 மீட்டர் தொலைவுக்கு நீந்தி சாதனை படைத்துள்ளான். இந்த சாதனை நீச்சல் நிகழ்ச்சிக்கு காஸ்மோபாலிட்டன் கிளப் நீச்சல் குளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதைக் காண பெரும் திரளான கூட்டம் கூடியிருந்தது.

விஜயலட்சுமியின் தம்பி அருண் பாலாஜிதான் மகரந்த்தின் நீச்சல் பயிற்சியாளர் ஆவார். அருண் பாலாஜி முதலில் நீச்சல் குளத்தில் இறங்கி, குழந்தையா வாங்கிக் கொண்டார். பின்னர் குழந்தையுடன் ஒரு முங்கு முங்கினார்.

Magaranth with Father and Mother

அதன் பின்னர் குழந்தையை ெமதுவாக நீச்சல் குளத்தில் தவழ விட்டார். எந்தப் பயமும் இல்லாமல் குழந்தை கையைக் காலை ஆட்டி நீந்த ஆரம்பித்தது.

10 அடி ஆழமுள்ள குளத்தில் 4 மீட்டர் தூரம் வரை நீந்தி அசத்தினான் மகரந்த். இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, அகில இந்திய கராத்தே சம்மேளன சேர்மன் கராத்தே தியாகராஜன், ஆசிய பசிபிக் மண்டல சிறப்பு ஒலிம்பிக் ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் ஆகியோர் நேரில் பார்த்தனர்.

மகரந்த்தின் சாதனை குறித்து அவனுடைய தாயார் விஜயலட்சுமி கூறுகையில், ஆஸ்திரேலியாவில் இரண்டரை வயது குழந்தை தண்ணீரில் நீச்சலடிப்பதாக முன்பு செய்தி ஒன்றைப் படித்தேன்.

இதைப் பார்த்த பின்னர் எனது குழந்தையையும் இந்த சாதனையை செய்ய வைக்க தீர்மானித்தேன். ஒரு வயதிலேயே நீச்சல் குளத்தில் விட்டு பார்த்தோம். அவன் அழாமல் இருந்ததால் தொடர்ந்து பயிற்சி கொடுக்க ஆரம்பித்தோம்.

எனது தம்பி அருண் பாலாஜிதான் நீச்சல் பயிற்சி கொடுத்தார். தினசரி 1 மணி நேரம் என 2 மாதம் பயிற்சி கொடுத்தார். இப்போது இந்த அளவுக்கு வந்துள்ளான் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+