ஐ.நா.வில் புலிகள்-கோத்தபயா அலறல்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: ஐ.நா.அமைப்பில் விடுதலைப் புலிகள் ஊடுறுவல் இருப்பதாக இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் தம்பியும்,அந்நாட்டு பாதுகாப்புத் துறை செயலாளருமான கோத்தபயா ராஜபக்ஷே கூறியுள்ளார்.

சமீபத்தில் கொழும்பு நகரிலிருந்து தமிழர்களை வெளியேற்றும் அடாவடி நடவடிக்கையில் கொழும் காவல்துறை ஈடுபட்டது. இந்த நடவடிக்கைக்கு இலங்கை உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

கொழும்பு காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு ஐ.நா.சபை, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து தனது நடவடிக்கையை நிறுத்தியது இலங்கை அரசு. மேலும், தமிழர்களை வெளியேற்றியதற்காக மன்னிப்பும் கேட்டது.

இந்த நிலையில் கோத்தபயா ராஜபக்ஷே இதுகுறித்துக் கூறுகையில், மனித உரிமை விவகாரங்களில் வெளிநாட்டு சக்திகள் இரட்டை வேடம் போடுவதோடு இலங்கையை வம்பிற்கும் இழுக்கின்றன. எங்கள் பிரச்சனையை புரிந்து கொள்ளாமல் மேலும் எங்களை பிரச்சனையில் தள்ள பார்க்கின்றனர். இங்கிலாந்தையோ மற்ற ஐரோப்பிய நாடுகளையோ நாங்கள் சார்ந்திருக்கவில்லை.

இங்கு வந்த இங்கிலாந்து அமைச்சர் ஹிம் ஹாவெல் தவறான தகவல்கள் அளித்துள்ளார். அவர் விடுதலைப்புலிகளுக்கு எதிராக ஒரு வார்த்தையும் பேசவில்லை. இலங்கை அரசையும், ராணுவத்தையும் குறை சொல்கிறார்.

விடுதலைப்புலிகள் கடந்த 30 வருடங்களாக திட்டமிட்டு ஐ.நா நிறுவனங்களுக்குள் ஊடுருவியுள்ளனர். இது ஐ.நா.வுக்கும் தெரியும். இதனால் இங்கிலாந்து எங்களை தனிமைப்படுத்தி விடுவதாக மிரட்டுகிறது என்று கூறியுள்ளரார் கோத்தபயா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+