ஜனாதிபதி தேர்தல்: மூன்றாவது அணி சார்பில்பரூக் அப்துல்லா போட்டி
டெல்லி:ஜனாதிபதி தேர்தலில் மும்முனைப் போட்டியை உருவாக்க ஜெயலலிதா தலைமையிலான மூன்றாவது அணி முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த அணியின் சார்பில் முன்னாள் காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லாவை நிறுத்துவது குறித்து ஆலேசனைகள் நடக்கின்றன.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
பாஜக கூட்டணி இந்த விஷயத்தில் நிலை தடுமாறி வருகிறது. துணை ஜனாதிபதி ஷெகாவத்தை போட்டியிட வைக்கவுள்ளது அந்தக் கட்சி. ஆனால், அவரை சுயேச்சையாக நிறுத்தினால் பாஜக எதிர்ப்பு அணியின் வாக்குகளும் விழும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
ஆனால், அந்த கணக்கைக் குலைக்கும் வேலையில் மூன்றாவது அணி இறங்கியுள்ளது.
மூன்றாவது அணி சார்பில் பரூக் அப்துல்லாைவ நிறுத்தி காங்கிரஸையும் பாஜக அணியையயும் குழப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
அப்துல்லா இப்ேபாது ஆஸ்திரேலியாவில் இருந்தபடி மூன்றாவது அணித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications