லஞ்ச பணத்துடன் சார் பதிவாளர் கைது
ஈரோடு: நிலப் பத்திரம் பதிவு செய்ய லஞ்சப் பணம் கேட்ட ஈரோடு குன்னத்தூர் சார் பதிவாளரை போலீஸார் கைது செய்தனர்.
லஞ்ச ஊழலில் கொடி கட்டிப் பறக்கும் துறை பதிவுத் துறை. வீடு, நிலம் வாங்கினாலோ விற்றாலோ இங்கு போய் தான் பதிவு செய்ய வேண்டும். இங்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கிறோமோ அதற்கு தகுந்த அளவு கட்டடத்தின் அல்லது நிலத்தின் மதிப்பை குறைத்து, பதிவுக் கட்டணத்தையும் குறைத்துக் கட்ட முடியும்.
இங்கு ஆண், பெண் பேதமே இல்லாமல் ஊழியர்கள் கையை நீட்டுவார்கள். அதிகாரிகள் முதல் பியூன் வரை எல்லோரும் லஞ்சத்தில் ஊறும் துறை இது. காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 7 மணி வரை நல்ல பிஸினஸ் நடக்கும்.
இந்த அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அவ்வப்ேபாது ரெய்டும் நடத்தும். சிலர் பிடிபடுவர் (அடுத்த நாளில் இருந்தே மீண்டும் லஞ்ச வசூலும் ஆரம்பமாகிவிடும்). சில நேரம் யாராவது புகார் தந்தால் ரெய்ட் நடத்தப்படும். அந்த வகையான ெரய்ட் இன்றும் நடந்தது.
கோபி செட்டிபாளையத்தை சேர்ந்த சந்திரசேகர்(52),ஈரோடு குன்னத்தூரில் சார் பதிவாளராக இருக்கிறார். இவர் தன்னிடம் நிலம் பத்திர பதிவு செய்வதற்காக வந்த கருப்பசாமி என்பவரிடம் லஞ்ச பணமாக ரூ.40,000 கேட்டுள்ளார்.
இதனால் கருப்பசாமி ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீஸார் புகார் கொடுத்தார். இதையடுத்து சந்திரசேகரை கைது செய்ய போலீஸார் திட்டமிட்டனர்.
இதன்படி கருப்பணசாமியை சந்திரசேகரின் வீட்டிற்கு ரூ.10,000 பணத்துடன் அனுப்பி வைத்தனர். இதை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கண்ணம்மாள் மற்றும் போலீஸார் மறைந்திருந்த கண்காணித்தனர்.
சந்திரசேகர் பணத்தை வாங்கும்போது அவரை கைது செய்தனர். பின்னர் அவருடைய வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது ரூ.8 லட்சத்து 62,000 பணம் சிக்கியது. அவற்றை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் குன்னத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்திலும் சோதனை செய்து வருகின்றனர்.
ரொக்கமாவே ரூ. 8.62 லட்சம் பிடிபட்டுள்ள நிலையில் இவரது அசையா சொத்துக்கள் பல கோடி ரூபாய் மதிப்புள்ளவை என்கிறார்கள். இத்தனைக்கும் இவரது மாத சம்பளம் ரூ. 12,000த்தைத் தாண்டாது.












Click it and Unblock the Notifications