நெல்லையில் தொழிலதிபர் படுகொலை

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:திருநெல்வேலியில் பெண்ணுடன் தொடர்பு காரணமாக ஏற்பட்ட தகராற்றில் தொழிலதிபர் படுகொலை செய்யப்பட்டார்.

திருநெல்வேலி கோவில் பச்சேரியை சேர்ந்த கர்ணன், திருப்பூரில் நூற்பாலை நடத்தி வந்தார்.

இவருக்கும், கிராம நிர்வாக அலுவலகத்தில் வேலை செய்யும் வேறு ஜாதி பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. கர்ணன் அப்பெண்ணுக்கு ஏராளமான உதவிகளை செய்தார். அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக முடிவு செய்தார்.

வேறு ஜாதியை சேர்ந்த கர்ணன், நம் ஜாதி பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள கூடாது என அப்பகுதியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த பகுதியில் கிறிஸ்துவ தேவாலயம் கட்ட கர்ணன் நிறைய உதவிகளை செய்து வந்தார். இவருடைய சகோதரர் மதிமத்தே உள்ளூரில் பள்ளி கட்டிடம் கட்ட மும்பையிலிருந்து ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

இவர்களின் பொது நல சேவை பாராட்டி சிலர் போஸ்டர் அடித்து ஒட்டி நன்றி தெரிவி்த்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவருடைய எதிரணியினர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து கர்ணன் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் அவருடைய எதிரணியினரை கூப்பிட்டு எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

தங்கள் ஜாதி பெண்ணிடம் தொடர்பு வைத்திருப்பது மட்டுமல்லாமல், தங்கள் மீது போலீஸில் புகார் கொடுத்ததால் மிகவும் ஆத்திரமடைந்த எதிரணியினர், இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த கர்ணனை அவரது வீட்டு வாசலில் வைத்து சரமாரியாக வெட்டினர். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதில் படுகாயமடைந்த அவர் உயிருக்கு போராடிய நிலையில் பாளை அரசு மருத்துவமனையில் கிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பலியானார்.

முதல்வர் வரவுள்ள இந்த நிலையில் திருநெல்வேலியில் கொலை நடந்திருப்பது காவல்துறையை பரபரப்பாக்கி்யுள்ளது. இந்த இருபிரிவினருக்குமிடைய அசம்பாவிதங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+