சென்னை ஐஐடியில் ரூ. 100 கோடியில் அதிநவீனஆராய்ச்சி மையம்-11 ஏக்கரில் அமைகிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி மையம் (ரிசர்ச் பார்க்) அமைக்க 11 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது.
ரூ. 100 கோடி செலவில் இந்த மாபெரும் ஆய்வு மையத்தை இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி அமைக்கவுள்ளது.
அதி நவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய இந்த ஆய்வு மையப் பணிகள் ஓரிரு மாதத்தில் தொடங்கும் என ஐஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இத் திட்டத்துக்காக ரூ. 60 கோடி சிறப்பு நிதியை மத்திய மனிதவள அமைச்சகம் வழங்கும் எனத் தெரிகிறது.
ஸ்டாண்போர்ட் (எஸ்ஐடி), மசாசூசெட்ஸ் (எம்ஐடி)பல்கலைக்கழகங்களுக்கு இணையான ஆய்வு மையமாக இது அமையப் போகிறது.
இந்த ஆராய்ச்சி மைய உருவாக்கத்தில் தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களும் பங்கேற்கவுள்ளன.
இங்கு தனியார் நிறுவனங்களும் ஆய்வுகள் நடத்த அனுமதிக்கப்படும்.












Click it and Unblock the Notifications