கோட்டா வேண்டாம்-கூறுகிறார் டாடா
சென்னை:தனியார் துறையில், இட ஒதுக்கீட்டை அமல் செய்வதற்குப் பதில் அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்புகளை அளிப்பதை உறுதி செய்யலாம் என்று டாடா குழும தலைவர் ரத்தன் டாடா கூறியுள்ளார்.
சென்னையில், நிறுவனங்களின் சமூக பொறுப்பு என்ற பெயரில் ஒரு கருத்தரங்கம் நடக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக வந்த ரத்தன் டாடா செய்தியாளர்களிடம் பேசுகையில், அனைவருக்கும் சம வாய்ப்புகள் அளிக்கப்படும் இடமாக நமது நாடு திகழ வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். நமது நாட்டில் அனைவருக்கும் சம வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும்.
இட ஒதுக்கீடு குறித்த விவாதம் தொடங்கும் முன்பே இந்த விஷயத்தில் இந்திய தொழிலக கூட்டமைப்புடன் இணைந்து நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
டாடா சன்ஸ் நிறுவனத்தில், யாருக்கும் மிதமிஞ்சிய சம்பளத்தை நாங்கள் தருவதில்லை. எனவே இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ள கவலை குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை.
ஆங்கிலோ-டச்சு நிறுவனமான கோரஸ் ஸ்டீல் நிறுவனத்தை டாடா ஸ்டீல் நிறுவனம் வாங்கிய விதம் குறித்து நான் பெருமைப்படுகிறேன். டாடா ஸ்டீல் நிறுவனமும், கோரஸ் நிறுவனமும் இணைக்கப்பட்டு வரும் விதமும் திருப்தி அளிப்பதாக உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications