ரூ.20 கோடியில் நவீனமாகும் சென்னை சென்ட்ரல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை ரூ.20 கோடி செலவில் மேம்படுத்த தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது .

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்,

சென்ட்ரல் ரயில் நிலையம் 130 வருடம் பழமையானதாகும். இங்கு நாள்தோறும் ஒன்றரை லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர். தினமும் 100 ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தற்போது இந்த ரயில் நிலையம் ரூ.20 கோடி செலவில் நவீன மயமாக்கப்படவுள்ளது. நடைபாதைகளில் கிரானைட் கற்கள் பதிக்கப்படும். ரயில் நிலையத்தின் முன் புதிய நீர்வீழ்ச்சி அமைப்பு உருவாக்கப்படும்.

ரயில் நிலையத்தை தூய்மையாக பராமரிக்கும் வகையில் இயந்திரங்கள் கொண்டு தூய்மைப்படுத்தும் முறையும் அறிமுகப்படுத்தபடும்.

உடல் ஊனமுற்றவர்கள் ரயில்களை அடைய தென்னக ரயில்வேயில் முதன்முறையாக பேட்டரி கார்கள் அறிமுகப்படுத்தபடவுள்ளன. 11 நடைபாதைகளிலும் அவர்கள் சிரமமின்றி சென்று வர ஏற்பாடுகள் செய்யப்படும்.

மேலும் பயணிகளுக்காக பல புதிய வசதிகளும் அறிமுகமாகவுள்ளன என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+