காவிரி நீரை திறந்துவிட கர்நாடகத்துக்கு இந்திய கம்யூ. கோரிக்கை
சென்னை: காவிரிவிலிருந்து குறுவை பயிருக்காக தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடகாவை இந்திய கம்யூனிஸ்ட் வற்புறுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
காவிரி நடுவர் மன்றம் விதித்துள்ள நிபந்தனையின்படி மே மற்றும் ஜூன் மாதங்களில் விவசாயிகளின் நலனுக்காக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும்.
கர்நாடகம் கொடுக்க தயங்கினால் மத்திய அரசு அம்மாநில அரசுக்கு, காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை குறித்து அறிவுறுத்த வேண்டும்.
தமிழகம் செய்துள்ள மறு ஆய்வு மனுவின் தீர்ப்பிற்காக யாரும் காத்திருக்க வேண்டியதில்லை. தீர்ப்பு என்பது தீர்ப்பு தான். அதை மதிக்க வேண்டும்.
மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணையில் போதுமான நீர் இல்லை. அதனால் நீர்ப்பாசனத்திற்காக அணையை திறந்து விட முடியாத நிலையில் தமிழக அரசு உள்ளது.
அதனால் கர்நாடக காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மதித்து, தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய தண்ணீரை கொடுக்க வேண்டும். நாம் எதுவும் புதியதாக கேட்கவில்லை. காவிரி நடுவர் மன்றம் அளித்துள்ள தீர்ப்பின் படி நீரை கேட்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications