பெண்கள் இடஒதுக்கீட்டிகு பிள்ளையார் சுழி-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:ஜனாதிபதி தேர்தலில் பெண் வேட்பாளர் நிறுத்தப்படுவது பெண் இடஒதுக்கீட்டிற்கான நம்பிக்கையின் தொடக்கம், ஆதிக்க மொழியில் சொல்வதானால் பிள்ளையார் சுழி என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

டெல்லியில் நேற்று மாலை சோனியா காந்தி தலைமையில் கூட்டணி கட்சிகளில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்ததது. இதில் தமிழக முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில்,

முதன்முதலாக குடியரசு தலைவர் வேட்பாளராக பெண் அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து தங்கள் கருத்து என்ன?

நாங்கள் அனைவரும் சேர்ந்துதான் இந்த முடிவை எடுத்துள்ளோம். இதைப்பற்றி மற்றவர்கள் தான் கருத்து சொல்ல வேண்டும்.

குடியரசு தலைவராக பெண் வருவது பற்றி?

பெண்கள் இடஒதுக்கீட்டிற்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய தொடக்கம் இது. ஆத்திக மொழியில் சொல்ல வேண்டுமானால் பிள்ளையார் சுழி.

இந்த முடிவிற்கு பிறகாவது இடதுசாரி கட்சிகள் காங்கிரசுடன் சுமூகமாக இருப்பார்களா?

அவர்கள் ஒப்புதலோடுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

டெல்லி பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளது பற்றி?

வாழ்த்துக்கு நன்றி.

இதற்கு முன்பு நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தல்களிலும் தேவகவுடாவை பிரதமராக தேர்ந்தெடுத்த நேரத்திலும் உங்கள் முயற்சி மூல காரணமாக அமைந்துள்ளது. இப்போதும் அது போன்ற வெற்றி கிடைத்திருப்பது பற்றி?

மகிழ்ச்சிகரமாகவும், வெற்றிகரமாகவும் முடிந்துள்ளது . இதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி.

காங்கிரஸ், இடதுசாரிகள் இடையே தாங்கள் மத்தியஸ்தராக இருந்து பெரும் பணி ஆற்றியதற்கு பலன் கிடைத்திருப்பது பற்றி?

முடிந்தால், மனம் இடம் தந்தால் பெருமைபடுங்கள் என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+