பிரதீபாவை போட்டியின்றி தேர்வு செய்ய வேண்டும்-ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:ஜனாதிபதி பதவிக்கு பெண் வேட்பாளரான பிரதீபா பாட்டீல் நிறுத்தப்படவுள்ளதற்கு பாமக ஆதரவும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளது.
அக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஒரு பெண்ணுக்கு மாபெரும் மரியாதை செய்யப்பட்டுள்ளது. இதை அனைவரும் வரவேற்க வேண்டும். பிரதீபா பாட்டீலை போட்டியின்றி தேர்வு செய்ய அனைத்துக் கட்சியினரும் ஆதரவு தர வேண்டும்.
சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்குப் பின் ஒரு பெண்ணை குடியரசுத் தலைவர் பதவிக்குக் கொண்டு வருகிறோம் என்பது சாதாரணமான விஷயம் அல்ல. அவரை போட்டியின்றி வெல்லச் செய்ய வேண்டிய பொறுப்பு அனைத்துக் கட்சிகளும் உண்டு.
பிரதீபா பாட்டீலை தேர்வு செய்த பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications