எக்ஸ்பிரஸ் ரயில்களில் இனி 4 அன்-ரிசவ்ர்ட் பெட்டிகள்: வேலு
சென்னை:எக்ஸ்பிரஸ் ரயில்களில் விரைவில் 4 பொதுப் பெட்டிகள் அன்-ரிசர்வ்ட் பெட்டிகள் இணைக்கப்படும் என ரயில்வேத்துறை இணையமைச்சர் வேலு கூறியுள்ளார்.
சென்னை ஐசிஎப் வடக்கு காலனியில் புதிய லேக் வியூ பூங்காவைத் திறந்து வைத்த வேலு நிருபர்களிடம் பேசுகையில்,
மும்பை புறநகர் ரயில் போக்குவரத்துத் திட்டத்துக்கு ரூ. 2,000 கோடியில் 150 பெட்டிகள் சென்னையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஒவ்வொரு பெட்டியிலும் 500 பேர் பயணிக்கலாம். ஒரு பெட்டியின் மதிப்பு ரூ. 19 கோடி.
இந்தப் பெட்டிகளின் தரை, கூரை ஆகியவை ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் அமைக்கப்படும்.
இப்போது எக்ஸ்பிரஸ் ரயில்களில் 2 பொதுப் பெட்டிகள் தான் உள்ளன. பட்ஜெட்டில் அறிவித்தது போல இனிமேல் 4 பொதுப் பெட்டிகள் இணைக்கப்படும். இதன் மூலம் அன்-ரிசர்வ்ட் பயணிகள் பெரும் பலனடைவார்கள்.
இனிமேல் அன்-ரிசர்வ்ட் பெட்டிகளில் மரக் கட்டை பெஞ்சுகள் இருக்காது. அவை குஷன் இருக்கைகளாக மாற்றப்படும் என்றார் வேலு












Click it and Unblock the Notifications