இன்று கூடுகிறது அதிமுக செயற்குழு

Subscribe to Oneindia Tamil

சென்னை:இன்று மாலை அதிமுக செயற்குழு கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் கூடுகிறது.

கொட நாடு எஸ்டேட் விவரகாரம், 2001 சட்டமன்றத் தேர்தலில் 4 இடங்களில் போட்டியிட்டது ஆகிய பிரச்சனைகளில் தேர்தல் கமிஷனிடம் சிக்கியுள்ளார் ஜெயலலிதா.

விதியை மீறி அதிமுக தலைமையகத்தை கட்டிய விஷயத்திலும் மாட்டியுள்ளார்.

இப்படி பல சிக்கல்கள் நிலவுதால் அதிலிருந்து தப்ப அரசியல் பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி வருகிறார் ஜெயலலிதா. அதில் ஒன்று தான் மூன்றாவது அணி.

மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தல் நடக்கவுள்ளது. இதில் அழகிரியையும் திமுகவையும் முறியடிக்கத் தீவிரமாக இறங்கியுள்ளார் ஜெயலலிதா.

இத்தகைய பின்னணியில் அதிமுக செயற்குழு கூட்டம் இன்று மாலை கூட்டப்பட்டுள்ளது. கட்சியின் தலைமைக் கழக அலுவலகத்தில், மாலை 4 மணிக்கு ஜெயலலிதா தலைமையில் கூடும் இக்கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என ஜெயலலிதா கூறியுள்ளார்.

மொத்தம் 200 பேர் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். இக்கூட்டத்தில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+