மதுரை-ரெளடிகளை கொண்டு வன்முறை நடத்ததிட்டம்: திமுக, அதிமுக பரஸ்பரம் புகார்
மதுரை:மதுரை மேற்கு தொகுதி இடைத் தேர்தலில் வன்முறையை தூண்டிவிட திட்டமிட்டிருப்பதாக திமுகவும் அதிமுகவும் தேர்தல் ஆணையத்திடம் ஒருவர் மீது ஒருவர் புகார் மனு கொடுத்துள்ளன.
மதுரை மேற்கு தொகுதியில் பொன்னாகரம் பிராட்வே பகுதியில் 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த எம்ஜிஆர் மன்றத்தை சில மர்ம நபர்கள் இடித்து தரைமட்டமாக்கினர்.
இந் நிலையில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த வழக்கறிஞர்கள் முருகன், ஜான்சேவியர், கருணாநிதி, ரமேஷ், ராஜேன் கண்ணன் உள்ளிட்டோர் தேர்தல் பார்வையாளர் அஜீத் தியாகியிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த மனுவில், மதுரை மேற்கு தொகுதி இடைத் தேர்தலின்போது அதிமுக மற்றும் மதிமுகவினர் வன்முறையை தூண்டுவதற்கு திட்டமிட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், பாண்டியன், முன்னாள் எம்எல்ஏ செல்லச்சாமி, பழனிச்சாமி ஆகியோர் ஹோட்டல்களில் தங்கியுள்ளனர்.
இவர்களுடன் 100க்கும் மேற்பட்ட ரவுடிகளும் உள்ளனர். எனவே தேர்தலை அமைதியாக நடத்த அவர்களை வெளியேற்ற வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
இதேபோல் அதிமுக சார்பில் தமிழ்செல்வன், கோவிந்தன், கருணாகரன், இமையன் உள்ளிட்ட 10 வழக்கறிஞர்கள் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்தனர்.
அதில், இடைத் தேர்தலில் கள்ள ஓட்டு போடவும், வன்முறையை ஏற்படுத்தவும் திமுக கூட்டணி கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக கொலை குற்றங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் இந்த தொகுதியில் நடமாடி வருகின்றனர். வாக்களார்களுக்கு பணம் கொடுத்து வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications