ஜனாதிபதி தேர்தல்-வேட்பு மனு தாக்கல் தொடக்கம்
டெல்லி:குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று முறைப்படி வெளியிட்டது. இதையடுத்து வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று முறைப்படி வெளியிட்டது. இதையடுத்து இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
ஜூன் 30ம் தேதி வரை மனுக்களைத் தாக்கல் செய்யலாம். ஜூலை 2ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். ஜூலை 4ம் தேதிக்குள் மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். ஜூலை 19ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜூலை 21ம் தேதி நடைபெறும்.
ஜூலை 25ம் தேதி குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து அப்துல் கலாம் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராஜஸ்தான் ஆளுநர் பிரதீபா பாட்டீல், இன்று பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
பிரதமர் இல்லத்தில் அவரைச் சந்தித்த பிரதீபா பாட்டீல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
அப்போது தன்னை வேட்பாளராக்கியதற்காக சோனியா காந்திக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார் பிரதீபா பாட்டீல்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications