நெல்லை ஐ.டி. பூங்கா: கருணாநிதி அடிக்கல் நாட்டினார்
திருநெல்வேலி:நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் ரூ. 300 கோடியில் அமையவுள்ள தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்கான அடிக்கல்லை இன்று முதல்வர் கருணாநிதி நெல்லையில் நாட்டினார்.
நெல்லை அருகே உள்ள கங்கை கொண்டானில் தமிழக அரசின் எல்காட் நிறுவனம் சார்பில் ரூ. 300 கோடி செலவில், தகவல் தொழில்நுட்ப் பூங்கா அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நெல்லையில் நடந்தது.
இதற்காக இன்று காலை நெல்லை சென்றடைந்தார் முதல்வர் கருணாநிதி. பாளையங்கோட்டை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கு சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் கங்கைகொண்டான் தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
இதே விழாவில் 4வது கட்ட இலவச நிலம் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார் முதல்வர். இந்த திட்டத்தின் மூலம் 26 ஆயிரத்து 308 ஏக்கர் நிலம் வழங்கப்படுகிறது.
இதே விழாவில் மேலும் பல நலத் திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார். பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ராதிகா செல்வி, மாநில அமைச்சர்கள் பூங்கோதை, மைதீன்கான், நெல்லை மாநகராட்சி மேயர் ஏ.எல்.சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இன்று மாலை 6 மணிக்கு பொருட்காட்சி திடலில் நடைபெறும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்ணுரிமை மாநாட்டில் முதல்வர் பங்கேற்கிறார். மாநாட்டுக்கு தொல். திருமாவளவன் தலைமை தாங்குகிறார்.
நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இன்று இரவு மதுரை செல்கிறார் முதல்வர் கருணாநிதி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications