பிரதீபாவை சந்தித்த பைரான் சிங் ஷெகாவத்
டெல்லி:ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும், ராஜஸ்தான் ஆளுநர் பிரதீபா பாட்டீலை, துணை குடியரசுத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத் சந்தித்துப் பேசினார்.
![]() |
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் ராஜஸ்தான் ஆளுநரான பிரதீபா பாட்டீல் போட்டியடுகிறார்.
எதிர் முனையில் பைரான் சிங் ஷெகாவத் களம் காணுவார் எனக் கூறப்படுகிறது. அவரை 3வது அணியும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் ஆதரிக்கும் எனத் தெரிகிறது.
![]() |
இந்த நிலையில் நேற்று டெல்லி வந்திருந்தார் பிரதீபா பாட்டீல். பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோரை பிரதிபீ பாட்டீல் சந்தித்துப் பேசினார்.
மேலும் ஷெகாவத்தையும் சந்தித்துப் பேச நேரம் கேட்டிருந்தார். இந்த நிலையில் பிரதீபா பாட்டீல் தங்கியிருந்த ஜோத்பூர் மாளிகைக்கு ஷெகாவத் திடீரென சென்றார். துணை குடியரசுத் தலைவர் பதவியில் இருக்கும் ஷெகாவத், மாநில ஆளுநரைத் தேடிச் சென்று பார்ப்பது புரோட்டாகாலுக்கு முரணானது.
இருப்பினும் அந்த மரபைப் பொருட்படுத்தாமல் பிரதீபா பாட்டீலை, ஷெகாவத் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவும் உடன் இருந்தார்.
பிரதீபா பாட்டீலின் கணவர் தேவிசிங் ஷெகாவத்தும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்தான். அவரும், பைரான் சிங் ஷெகாவத்தும் அருகருகே உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி














Click it and Unblock the Notifications