டிக்கெட் கட்டணம்: தியேட்டர்களுக்கு அரசு எச்சரிக்கை
சென்னை:அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
ரஜினிகாந்த்தின் சிவாஜி படம் தமிழகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆட்சியில், தியேட்டர்களில் புதிய படங்கள் திரையிடும்போது சில வாரங்களுக்கு இஷ்டம் போல கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம் என தியேட்டர்களுக்கு அரசு சலுகை அளித்திருந்தது.
ஆனால் அந்த சலுகையை திமுக அரசு ரத்து செய்து விட்டது. குறைந்தபட்ச கட்டணம், அதிகபட்சக் கட்டணத்தை அரசே நிர்ணயித்துள்ளது.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள சிவாஜி படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, தவறு எங்கு நடக்கிறது என்பதைக் குறிப்பிட்டுச் சொன்னால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த நிலையில் நேற்று தமிழக அரசின் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், குறிப்பிட்ட சில திரைப்படங்களுக்கு கூடுதல் நுழைவுக் கட்டணம் மிக அதிகமாக வசூலிப்பது குறித்து முதல்வர் கருணாநிதியிடம் கடந்த 15ம் தேதி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இது சம்பந்தமாக அரசு பின்வரும் விளக்கத்தை அளிக்கிறது.
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பது சம்பந்தமாக புகார்கள் வரப் பெற்றால், சம்பந்தப்பட்ட தியேட்ட்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications