ஹோமோவுக்கு உட்படாத மாணவனைக் கொன்ற ஆசிரியர்
திருநெல்வேலி:ஓரினச் சேர்க்கை உறவுக்கு உடன் பட மறுத்த தனது மாணவனைக் கொலை செய்தார் ஆசிரியர்.
நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள பாம்புக்கோவில் சந்தை என்ற பகுதியைச் சேர்ந்தவர் திருமலைச்சாமி. இவர் ஒரு வழக்கறிஞர். இவரது மகன் விக்னேஷ்வரன். கடந்த 5ம் தேதி அப்பகுதியில் உள்ள ஒரு குளத்தில் பிணமாகக் கிடந்தான் விக்னேஷ்வரன்.
சத்யராஜ் பூபதி என்பவர்தான் விக்னேஷ்வரனைக் கொலை செய்தது தெரிய வந்தது. சத்யராஜ் பூபதி, ஆசிரியர் பயிற்சி வகுப்பை முடித்துள்ளார். அப்பகுதியில் ட்யூஷன் எடுத்து வருகிறார். விக்னேஷ்வரன் மற்றும் அவனது தம்பி இந்திரஜித்திற்கும் டியூஷன் எடுத்து வந்தார்.
ஓரினச்சேர்க்கைப் பிரியரான சத்யராஜ் பூபதி, விக்னேஷ்வரனை மயக்கி தனது இச்சைகளைத் தீர்த்துக் கொண்டார். இந்த நிலையில்தான் பிணமாகக் கிடந்தான் விக்னேஷ்வரன். இதையடுத்து சத்யராஜ் பூபதியை போலீஸார் தேடி வந்தனர்.
இச்சூழ்நிலையில், மதுரையில் உள்ள நீதிமன்றத்தில் சத்யராஜ் பூபதி சரணடைந்தார். அவரை காவலில் எடுத்து நெல்லை போலீஸார் விசாரித்தனர்.
அப்போது சத்யராஜ் பூபதி கொடுத்த வாக்குமூலத்தில், விக்னேஷ்வரனை பலமுறை வெளியே கூட்டிச் சென்று ஓரினச் சேர்க்கை வைத்துக் கொண்டேன். சம்பவத்தன்றும் பாறைக்குளத்திற்கு அழைத்துச் சென்று ஓரினச் சேர்க்கைக்கு முயன்றேன். ஆனால் விக்னேஷ்வரன் ஒத்துழைக்கவில்லை.
இதனால் நான் கோபம் அடைந்து அவனைத் தாக்கினேன். பதிலுக்கு அவனும் என்னை அடித்தான். மேலும் வெளியே போய் சொல்லப் போவதாகவும் எச்சரித்தான்.
இதனால் பயந்து போன நான், விக்னேஷ்வரனைக் கொலை செய்து விட்டுத் தப்பிச் சென்றேன் என்று கூறியுள்ளார் சத்யராஜ் பூபதி.
ஆசிரியர் பணிக்கான பயிற்சியை முடித்த ஒருவர், மாணவனிடம் ஓரினச் சேர்க்கை உறவை வைத்துக் கொண்டு, அவன் மறுத்ததால் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications