மருத்துவமனையின் தவறான சான்றிதழ்;கேள்விக்குறியில் வாலிபர் வாழ்க்கை!
நாகர்கோவில்:எய்ட்ஸ் உள்ளதாக தனியார் மருத்துவமனை கொடுத்த தவறான சான்றிதழால் மனைவியால் புறக்கணிக்கப்பட்டு நட்டாற்றில் விடப்பட்ட வாலிபர் அந்த மருத்துவமனை மீது வழக்கு போட்டுள்ளார்.
நாகர்கோவிலைச் சேர்ந்தவர் விஜயன். இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில்தான் விஜயனுக்குக் கல்யாணம் நடந்தது. இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார் விஜயன்.
இதையடுத்து நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அப்போது அவருக்கு ரத்தப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் விஜயனுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார் விஜயனின் மனைவி. கணவர் மீது கோபம் கொண்டு தாய் வீடு போய் விட்டார். குழம்பிப் போன விஜயன், வேறொரு தனியார் மருத்துவமனைக்குச் சென்று மீண்டும் ரத்தப் பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இல்லை என்று தெரிய வந்தது.
இருப்பினும் இன்னொரு முறை உறுதி செய்து கொள்ளலாம் என்று கருதி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்குச் சென்று உறுதிப்படுத்தும் சோதனையை மேற்கொண்டார். அதிலும், எச்.ஐ.வி. பாதிப்பு இல்லை என்று தெரிய வந்தது.
மகிழ்ச்சி அடைந்த விஜயன், அந்த சான்றிதழுடன் மனைவியைத் தேடி ஓடினார். சந்தோஷப்படுவார் என்று எதிர்பார்த்த விஜயனுக்கு, போலிச் சான்றிதழைக் காட்டி ஏமாற்றப் பார்க்கிறீர்களா என்று மனைவி கேட்டதும் பெரும் அதிர்ச்சியாகிப் போய் விட்டது. மேலும் காவல் நிலையத்தில் புகார் செய்வேன் என்றும் அவரது மனைவி கூறியுள்ளார்.
மனைவியின் பேச்சால் மனம் உடைந்த விஜயன், இத்தனைப் பிரச்சினைக்கும் காரணமான, தவறான மருத்து சான்றிதழைத் தந்த தனியார் மருத்துவமனை மீது நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications