ஸ்ரீகாந்த்-வந்தனா விவகாரத்தில்காவல்துறைக்கு வேலை இல்லை-கமிஷ்னர்
சென்னை:ஸ்ரீகாந்த், வந்தனா விவகாரத்தை சிவில் நீதிமன்றத்தை அணுகித்தான் தீர்வு காண முடியும். இதில் காவல்துறைக்கு எந்த வேலையும் இல்லை என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண் கூறியுள்ளார்.
ஸ்ரீகாந்த் வீட்டில் அதிரடியாக குடியேறி கடந்த 6 நாட்களாக போராட்டத்தில் குதித்துள்ளார் வந்தனா. அவரை வீட்டை விட்டு வெளியேற்றக் கோரி போலீஸில் ஸ்ரீகாந்த் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் நான் ஸ்ரீகாந்த்தின் மனைவி, எனக்கும் அவருக்கும் பதிவுத் திருமணம் நடந்து விட்டது. எனவே வீட்டை விட்டு வெளியேற மாட்டேன் என்று கூறி வருகிறார் வந்தனா. இதுதொடர்பான புகைப்பட ஆதாரங்களையும் அவர் வெளியிட்டு பரபரப்பைக் கூட்டியுள்ளார்.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று லத்திகா சரண் கூறுகையில், ஸ்ரீகாந்த், வந்தனா இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விசாரணையிலும் அவ்வாறே தெரிய வந்துள்ளது.
எனவே இந்தப் பிரச்சினைக்கு சிவில் நீதிமன்றத்தை அணுகித்தான் அவர்கள் தீர்வு காண முடியும். இதில் காவல்துறை தலையிட முடியாது.
பிரஷாந்த் மீது கிரகலட்சுமி கொடுத்த புகார் குறித்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்குப் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications