ஷெகாவத் சுயேச்சையாம்..பாஜக கூட்டணி ஆதரவாம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:சுயேச்சை வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பைரோன் சிங் ஷெகாவத்தை ஆதரிப்பதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவித்துள்ளது.

தீவிர ஆர்எஸ்எஸ்காரரான ஷெகாவத் ராஜஸ்தானைச் சேர்ந்த முக்கிய பாஜக தலைவராவார். ஆனால், துணை ஜனாதிபதியாக தேர்வான பின் மரபையொட்டி தனது பாஜக உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

Shekawat

இந் நிலையில் பாஜக கூட்டணி சார்பில் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். ஆனால், பாஜக சார்பில் போட்டியிட்டால் காங்கிரஸ் அல்லாத மதசார்பற்ற கட்சிகளின் வாக்குகள் கிடைக்காது என்பதால் அவரை சுயேச்சையாக களமிறக்கியுள்ளது பாஜக.

இதனால் இப்போது அவர் சுயேச்சை வேட்பாளராம். இந் நிலையில் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது ()என்பது குறித்து மாஜி பிரதமர் வாஜ்பாய் தலைமையில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் நடந்தது.

இக் கூட்டத்தில் ஷெகாவத்தை ஆதரிக்க முடிவெடுக்கப்பட்டதாக வாஜ்பாய், கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் முன்னிலையில் பாஜக மூத்த தலைவரான சுஷ்மா சுவராஜ் அறிவித்தார்.

அவர் கூறுகையில், இது கூட்டணியின் ஒருமித்த முடிவு. மதசார்பில்லாதவரும், அனுபவமும், திறமையும் வாய்ந்தவரான ஷெகாவத் தான் ஜனாதிபதி பதவிக்கு மிகவும் பொறுத்தமானவர். சுயேச்சையாக போட்டியிடும் அவரை எங்கள் கூட்டணி ஆதரிக்கும் என்றார்.

பின்னர் பேசிய ஜார்ஜ் பெர்னாண்டஸ், காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் பிரதீபா பாட்டீலும் அதிக எம்பி., எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கலாம். ஆனால், இந்த நிலை மாறும். கணக்குகள் நிலையாக இருப்பதில்லை. அவரை மாறும். பெண் என்பதால் பிரதீபாவை காங்கிரஸ் நிறுத்தவில்லை. யாரும் கிடைக்காததால் நிறுத்தியுள்ளார்கள் என்றார்.

முன்னதாக பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனா காங்கிரஸ் வேட்பாளரான பிரதீபாவை ஆதரிக்கலாம் என்று கூறப்பட்டது. மராட்டிய பெண்மணியான அவரை கைவிட்டால் மாநிலத்தில் தங்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என சிவசேனை கருதுகிறது.

ஆனால், ஷெகாவத்தை ஆதரிக்கும் பாஜக கூட்டணியின் இந்த முடிவுக்கு சிவசேனையின் முழு ஆதரவு கிடைக்கும் என்பது சந்தேகமே. வாக்குப் பதிவுக்கு முன் சேனை தரப்பில் புதிய அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+