ஓ.பன்னீர் செல்வத்தின் கார் மீது தாக்குதல்
மதுரை:மதுரை மேற்குத் தொகுதியில் பிரசாரம் செய்ய வந்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மேற்குத் தொகுதியில் அதிமுகவினரின் பிரசாரம் சூடு பிடித்து வருகிறது. நேற்று ஆழ்வார்புரம், வைகை வடகரை ஆகிய பகுதிளில் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், மதுரை மாநகர அதிமுக செயலாளர் ராஜன் செல்லப்பா ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஆழ்வார்புரத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திமுக கரை வேட்டி கட்டியிலிருந்த ஒரு நபர் பெரிய கல்லை எடுத்து வந்து பன்னீர் செல்வம் இருந்த காரின் கண்ணாடி மீது தூக்கி எறிந்தார். இதில் கண்ணாடி உடைந்தது. அதிர்ஷ்டவசமாக பன்னீர் செல்வம் உயிர் தப்பினார்.
சுதாரித்துக் கொண்ட அதிமுகவினர் அந்த நபரைப் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் ஓடி விட்டார். இதுகுறித்து மதிச்சியம் காவல் நிலையத்தில் அதிமுக சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications