23ம் தேதி பிரதீபா பாட்டீல் மனு தாக்கல்?
டெல்லி:ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரதீபா பீட்டீல் வருகிற 23ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-இடதுசாரிகளின் வேட்பாளராக ராஜஸ்தான் மாநில ஆளுநர் பிரதீபா பாட்டீல் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் எப்போது வேட்பு மனு தாக்கல் செய்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
![]() |
வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் டெல்லி வந்த பிரதீபா, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். பின்னர் பிரதீபாவை, துணை குடியரசுத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத் தேடி வந்து சந்தித்துப் பேசினார்.
நேற்று டெல்லி வந்த பிரதீபா பாட்டீல் இன்று முன்னாள் பிரதமர் வி.பி.சிங், மூத்த காங்கிரஸ் தலைவரும், குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டவருமான கரண் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
பின்னர் லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங் ஆகியோரையும் பிரதீபா சந்தித்துப் பேசினார். தேர்தல் உத்திகள் தொடர்பாக பிரதீபாவை மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பி.ஆர்.தாஸ் முன்ஷி சந்தித்துப் பேசினார்.
தனது டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு ஜெய்ப்பூர் திரும்பும் பிரதீபா பாட்டீல் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வார். அதன் பின்னர் வருகிற 23ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று தெரிகிறது.
வேட்பு மனுத் தாக்கல் செய்த பின்னர் ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று வாக்கு சேகரிக்கவும் பிரதீபா பாட்டீல் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.













Click it and Unblock the Notifications