சென்னையில் ரூ.225 கோடியில் அமெரிக்க எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னையில் ரூ.225 கோடியில் அமெரிக்க நிறுவனமான சான்மினா புதிய உற்பத்தி பிரிவை தொடங்கவுள்ளது. முதல்வர் கருணாநிதியின் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.

அமெரிக்காவில் சான்மினா எஸ்சிஐ என்ற நிறுவனம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியிலுள்ளது. உலகளவில் 198வது இடத்திலுள்ளது. 19 நாடுகளிலில் இந்நிறுவனத்தின் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிறுவனம் தற்போது சென்னையில் 100 ஏக்கர் பரபப்பளவில் ரூ.225 முதலீட்டில் தனது தொழிற்சாலையை தொடங்கவுள்ளது. இதன் மூதலீடு ரூ.315 கோடியாக உயரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனம் மூலம் 10,000 பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

இதற்கான ஒப்பந்தத்தில் தமிழக தொழில்துறை செயலர் சக்திகாந்த் தாஸும், சான்மினா நிறுவனத்தின் செயலாக்க பணிகள் தலைவர் ஹாரிபிள்ளையும் கையெழுத்திட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+