யாழ்ப்பாணத்தில் பயங்கர சண்டை:40 விடுதலைப் புலிகள் சாவு- இலங்கை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:யாழ்ப்பாணம் அருகே கடலில் நடந்த பயங்கர சண்டையில் 40 கடல் புலிகளை சுட்டுக் கொன்றதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இந்த நிலையில் யாழ்ப்பாணம் தீபகற்பத்தில், வெற்றிலைக்கேணி என்ற இடத்தில் கடலில் விடுதலைப் புலிகளின் கடல் புலிகள் பிரிவுக்கும், இலங்கை கடற்படைக்கும் இடையே கடும் சண்டை நடந்தது.

நேற்று இரவு இந்த சண்டை நடந்தது. கடற்படையினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நான்கு பிரிவுகளாக 20க்கும் மேற்பட்ட படகுகளில் கடல் புலிகள் காடைக்கடவு என்ற இடத்திலிருந்து கிளம்பி வந்தனர்.

அவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் ஐந்து படகுகள் சேதமடைந்து கடலில் மூழ்கியது. 9 படகுகள் பாதிப்படைந்தன. இந்த கடும் மோதலில் 40 கடல் புலிகள் கொல்லப்பட்டதாக கடற்படை கூறியுள்ளது.

கடற்படைக்கு உதவியாக ராணுவத்தினரும் மோதலில் பங்கேற்றனர். கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் மேலாக சண்டை நடந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+