மதுரை மாஜி திமுக மேயர் வீடு மீது பெட்ரோல்குண்டு வீச்சு: கார் சாம்பல்- 9 அதிமுகவினர் கைது
மதுரை:மதுரையில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் மேயர் குழந்தைவேலு வீட்டில் இன்று அதிகாலை சிலர் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த அவரது டாடா சுமோ கார் முற்றிலும் எரிந்து சாம்பலானது.
மதுரை மேற்குத் தொகுதியில் வருகிற 26ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் தொகுதியில் அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்களின் பிரசாரம் படு வேகம் பிடித்துள்ளது.
காங்கிரஸுக்கு ஆரவாக திமுகவினர் முழுமையாக களம் இறங்கியுள்ளனர். வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வாக்கு கேட்பதாக திமுகவும், அதிமுகவும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் இன்று அதிகாலை முன்னாள் திமுக மேயர் குழந்தைவேலு வீட்டில் சிலர் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதலில் ஈடுபட்டது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைவேலுவின் வீடு அண்ணா நகரில் உள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் சிலர் டாடா சுமோ காரில் (10 பேர் என்று குழந்தைவேலு கூறுகிறார்) வந்துள்ளனர். வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்கியுள்ளனர்.
இதில் படுக்கை அறை ஜன்னல் கண்ணாடி உடைந்து சிதறியது. அதிர்ந்து போன குழந்தைவேலு வேகமாக வெளியே வந்து பார்த்தார். அப்போது போர்ட்டிக்கோவில் நிறுத்தப்பட்டிருந்த அவரது டாடா சுமோ கார் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
அதற்குள் சுமா காரில் வந்த கும்பல் தப்பி ஓடி விட்டது. உடனடியாக அண்ணா நகர் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தார் குழந்தைவேலு. இந்த சம்பவத்தில் கார் முற்றிலும் எரிந்து விட்டது.
இந்த சம்பவம் குறித்து அமைச்சர் பொன்முடி தலைமையில் அமைச்சர்கள், திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், தேர்தல் பார்வையாளர் அஜய் தியாகியை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.
தேர்தலை தடுத்து நிறுத்த எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு இந்த செயலைச் செய்துள்ளனர் என்று அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.
கார் எரிப்பு சம்பவத்தால் மதுரை மேற்கு தொகுதி மட்டுமல்ல மதுரை மாநகரமே பரபரப்பில் தகித்துக் கொண்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications