ஆந்திராவில் கொத்தடிமைகளாக இருந்த தமிழர்கள் மீட்பு

Subscribe to Oneindia Tamil

கடலூர்:ஆந்திராவில் கொத்தடிமைகளாக இருந்த தமிழர்களை வருவாய்த்துறையினர் மற்றும் போலீஸார் மீட்டுள்ளனர்.

கடலூர் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த அருணாகிரி(40), அவருடைய மனைவி, மகள்கள், மகன் ஆகியோர் திருப்பதியை சேர்ந்த சௌத்திரி என்பவர் செங்கல் சூளையில் வேலை செய்வதற்காக கடந்த 2004ம் ஆண்டு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இவர்களிடம் தினமும் வேலை வாஙகிய செளத்ரி, அவர்கள் அனைவருக்கும் சேர்த்து வாரத்திற்கே ரூ.150 மட்டுமே கொடுத்துள்ளார். வெளியில் செல்ல அனுமதிக்காமல் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் மகள் சந்தியாவிற்கு உடல்நிலையில்லாமல் போனதால் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அருணாகிரி அங்கிருந்து தப்பித்து கடலூர் வந்தார். மாவட்ட ஆட்சியாளரிடம் கொத்தடிமைகளாக உள்ள தன் குடும்பத்தை மீட்டுத் தருமாறு மனு கொடுத்தார்.

இதையடுத்து தாசில்தார் ராதாகிருஷ்ணன், தனி தாசில்தார் ரங்கநாதன் ஆகியோர் போலீஸார் உதவியுடன் ஆந்திராவில் கொத்தடிமைகளாக இருந்த அருணாகிரியின் குடும்பத்தை மீட்டு கடலூர் ஆர்டிஓ பிருந்தா தேவியிடம் ஒப்படைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+