ஷீரடி சாய்பாபா கோவிலில் தேங்காய் உடைக்க தடை
மும்பை:மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலைத் தொடர்ந்து ஷீரடி சாய்பாபா கோவிலுலும் தேங்காய் உடைக்க காவல்துறை தடை விதித்துள்ளது.
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மும்பையில் உள்ள பிரபலமான சித்தி விநாயகர் கோவிலில் தேங்காய் உடைக்கவும், சாமிக்கு மாலைகள் அணிவிக்கவும், செல்போன் கொண்டு செல்லவும் காவல்துறை தடை விதித்துள்ளது.
இதே போல மஹாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து இங்கும் தேங்காய் உடைக்க, மாலைகள் அணிவிக்க செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக பக்தர்களுக்கு அறிவுறுத்துமாறு கோவில் நிர்வாகத்தை காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கிடையே, சித்தி விநாயகர் கோவிலில் தேங்காய் உடைக்க தடை விதிக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பையில் பாஜக சார்பில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications