கிரகலட்சுமி..காதல்..அலைபாயுதே கல்யாணம்..முதல் கணவர் பரபரப்பு வாக்குமூலம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:கிரகலட்சுமியுடன் ஏற்பட்ட காதல் பின்னர் நடந்த ரகசிய பதிவுத் திருமணம் குறித்து அவரது முதல் கணவரான நாராயணன் வேணுபிரசாத் போலீஸில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

நடிகர் பிரஷாந்த், கிரகலட்சுமி விவகாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு கிரகலட்சுமியின் முதல் கல்யாணம் குறித்த பரபரப்புத் தகவலை பிரஷாந்த் வெளியிட்டபோது அத்தனை பேரும் ஆடிப் போயினர்.

கிரகலட்சுமியின் முதல் திருமணம் குறித்த பதிவுத் திருமண சான்றிதழுடன் போலீஸில் புகார் கொடுத்தார் பிரஷாந்த். இதையடுத்து போலீஸார் விசாரணையில் இறங்கினர். அந்த விசாரணையில், பிரஷாந்த் கூறிய புகார்கள் உண்மைதான் என்று தெரிய வந்தது.

இதையடுத்து வேணு பிரசாத்தைக் கண்டறியும் வேலையில் போலீஸார் இறங்கினர். இதில் வேணு பிரசாத்தின் இருப்பிடம் தெரிய வந்தது. அவரை விசாரணைக்கு வருமாறு போலீஸ் தரப்பில் உத்தரவிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து வேணு பிரசாத், மாலை மாம்பலம் மகளிர் காவல் நிலையத்திற்கு வந்தார். துணை ஆணையர் பாஸ்கரன், உதவி ஆணையர் சலேத்ராஜ் ஆகியோர் முன்னிலையில் இன்ஸ்பெக்டர் சரஸ்வதியிடம் வேணு பிரசாத் விரிவான வாக்குமூலத்தை அளித்தார்.

வேணு பிரசாத் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்,

எனது சொந்த ஊர் கேரள மாநிலம் திருவனந்தபுரம். எனது தந்தை பெயர் நாராயணன் குட்டி, தாயார் லீலா. எனது தந்தை இப்போது உயிருடன் இல்லை. அவர் மத்திய அரசின் கண்ணாடி தொழிற்சாலையில் பணியாற்றியவர். எனது தாயார் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

எனது பெற்றோருக்கு நான் மட்டுமே ஆண் வாரிசு. எனக்கு ஒரு தங்கை உள்ளார். எனது தந்தைக்கு சென்னையில் வேலை என்பதால் எனது குடும்பம் சென்னையில் வசித்து வந்தது.

எனது பள்ளிப் படிப்பை அண்ணா நகர் கில் ஆதர்ஷ் பள்ளியில் படித்தேன். பின்னர் தபால் மூலம் சென்னை பல்கலைக்கழகத்தில் புவியியல் பட்டப்படிப்பை முடித்தேன். பிறகு பொறியியலில் டிப்ளமோ படிப்பை முடித்தேன்.

படிப்பை முடித்த பின்னர் எச்.சி.எல். நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். 1996ம் ஆண்டு கிரகலட்சுமியை சந்தித்தேன். அப்போது அவர் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படித்து வந்தார். எனது தங்கையின் தோழிகளுக்கு கிரகலட்சுமி தோழி ஆவார்.

திருமண நிகழ்ச்சி ஒன்றில்தான் கிரகலட்சுமியை சந்தித்தேன். பார்த்தவுடன் எங்களுக்குள் காதல் மலர்ந்து விட்டது. இருவரும் தீவிரமாக காதலித்தோம். கிரகலட்சுமி மிகவும் பணக்காரப் பெண். நானோ வசதியில் மலை அடிவாரம் போல.

ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் எங்களது காதல் தொடர்ந்தது. கிரகலட்சுமியின் வீட்டுக்குக் காதல் தெரிந்தால் அதை ஆதரிக்க மாட்டார்கள். இப்படிப்பட்ட குழப்பத்துடன் 2 வருடம் இருவரும் காதலித்தோம். காதலித்த காலத்தில் இருவரும் மனதளவில் மட்டுமே பழகினோம். தொட்டுக் கூடப் பேசியதில்லை.

1998ம் ஆண்டு ரகசிய பதிவுத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். அதுதான் எங்களுக்குள் நடந்த திருமணம். கோவிலில் போய் மாலை மாற்றிக் கொள்ளவில்லை, புகைப்படமும் எடுத்துக் கொள்ளவில்லை. கணவன், மனைவியாகவும் சேர்ந்து வாழ்ந்ததில்லை. திருமணத்திற்குப் பிறகு இருவரும் சந்தித்துக் கொள்ளவும் இல்லை.

2000மாவது ஆண்டு ஒரு நாள் கிரகலட்சுமி எனக்குப் போன் செய்தார். நமது கல்யாணத்தை முறைப்படி அனைவருக்கும் அறிவிக்க வேண்டும். நீங்கள் பெண் கேட்டு எனது வீட்டுக்கு வாருங்கள் என்றார். நானும் அதன்படி நானும் கிரகலட்சுமியின் வீட்டுக்குப் பெண் கேட்டுச் சென்றேன். பயந்து பயந்துதான் போனேன்.

அவரது வீட்டுக்குள் போனதும் பயந்து போய் விட்டேன். அவ்வளவு பெரிய மாளிகையாக அது இருந்தது. நிச்சயம் நமது கல்யாணம் நடக்காது என்று முடிவு செய்து விட்டேன்.

கிரகலட்சுமியின் தந்தையை சந்தித்து அவரது மகளை கல்யாணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தேன். அவரோ என்னை ஏளனமாக நடத்தி திருப்பி அனுப்பிவிட்டார்.

அதன் பின்னர் நான் அங்கு செல்லவும் இல்லை, கிரகலட்சுமியைப் பார்க்கவும் இல்லை.

ஒரு நாள் உறவினர் இறந்த நிகழ்ச்சிக்கு கிரகலட்சுமி வந்திருந்தார். அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். தனியாக சந்தித்து இருவரும் அழுதபடி அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தோம். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடியாது. இப்படியே நண்பர்களாக பிரிந்து விடுவோம் என்று நான் கூறினேன். அதை கிரகலட்சுமியும் ஏற்றுக் கொண்டார். அப்படியே கண்ணீர் மல்க விடைபெற்றோம்.

கிரகலட்சுமிக்கு நான் எழுதிய காதல் கடிதங்கள், அவருக்கு நான் கொடுத்த பொருட்களை என்னிடம் அவர் திரும்பக் கொடுத்து விட்டார். அதேபோல அவர் எனக்கு எழுதிய கடிதங்கள், பொருட்களை நான் திருப்பிக் கொடுத்து விட்டேன்.

அதன் பிறகு இருவரும் சந்திக்கவும் இல்லை, பேசவும் இல்லை. இருவரும் அவரவர் வழியில் சென்று விட்டோம். இருந்தாலும் நான் கிரகலட்சுமியை மறக்கவில்லை. அவரை எனது மனைவியாகத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். என்றாவது ஒரு நாள் கிரகலட்சுமி எனக்குக் கிடைப்பார் என்ற நம்பிக்கையில் இருந்தேன். ஏக்கத்தோடு காத்திருந்தேன்.

இந்த நிலையில்,தான் 2005ம் ஆண்டு கிரகலட்சுமிக்கும், நடிகர் பிரஷாந்த்திற்கும் கல்யாணம் என்ற செய்தியைப் பார்த்தேன். அத்துடன் எனது கனவுகள் கலைந்து போனது.

அந்த சமயத்தில் நான் நந்தனத்தில் உள்ள சிபி கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தேன். அந்த அலுவலகத்தில் என்னுடன் பணியாற்றி வந்த லீலா என்னைக் கல்யாணம் செய்து கொள்வதாக விருப்பம் தெரிவித்தார். நான் கிரகலட்சுமியைத் திருமணம் செய்து கொண்டதை அவரிடம் தெரிவித்தேன்.

ஆனால் அதை அவர் பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டு என்னைத் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார். இதையடுத்து 2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் லீலாவை நான் திருமணம் செய்து கொண்டேன்.

கடந்த 2 வருடங்களாக நானும், லீலாவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறோம். அவ்வப்போது கிரகலட்சுமியுடன் பழகிய அனுபவங்கள் எனது மனதில் அலையாக வந்து செல்லும். கிரகலட்சுமியும், பிரஷாந்த்தும் சந்தோஷமாக வாழட்டும் என்று பிரார்த்தித்துக் கொள்வேன்.

இந்த நிலையில் பிரஷாந்த்திற்கும், கிரகலட்சுமிக்கும் பிரச்சினை ஏற்பட்டு கோர்ட் வரை சென்றதை அறிந்து வேதனைப்பட்டேன். மேலும் விளையாட்டாக பதிவு செய்து கொண்ட திருமணம் கிரகலட்சுமியின் வாழ்க்கையைப் பாதிக்கும் அளவுக்குச் செல்லும் என்பதை கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை.

நான் முறைப்படி கிரகலட்சுமியை விவாகரத்து செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது. இப்போது ஏற்பட்டுள்ள பிரச்சினையால் எனது மனைவி லீலா வருத்தமடைந்துள்ளார். அவரை நான் சமாதானப்படுத்தியுள்ளேன். நானும் மிகவும் வருத்தமடைந்துள்ளேன்.

கிரகலட்சுமி தரப்பிலிருந்து இந்தப் பிரச்சினை குறித்து யாரும் பேசவில்லை என்று விரிவாகவே வாக்குமூலம் அளித்துள்ளார் நாராயண பிரசாத்.

நடிகர் என்பதால் ஒப்புக் கொண்ட கிரகலட்சுமி

வேணுபிரசாத்தை மணந்து ெகாண்டாலும் அலைபாயுதே ஸ்டைலில் தனியாகத் தான் வாழ்ந்து வந்திருக்கிறார் கிரகலட்சுமி. இந் நிலையில் அவருக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளனர் கிரகலட்சுமியின் பெற்ேறார். அப்ேபாதுதான் தனக்கு ஏற்கனவே கல்யாணமாகி விட்டதைக் கூறியுள்ளார் கிரகலட்சுமி.

அதைக் கேட்டு அதிர்ந்து போன அவர்கள் பிரசாத்தை வீட்டுக்கு வரச் ெசால்லியுள்ளனர். அப்படி வந்தபோது தான் அவரை அவமரியாதைப்படுத்தி அனுப்பியுள்ளனர்.

இது குறித்து வேணுபிரசாத் தரப்பினர் கூறுகையில், வேணு பிரசாத், கிரகலட்சுமியை தீவிரமாக காதலித்தார். ஆனால் தனது காதல் மீது கிரகலட்சுமிக்கு பெரிதாக பிடிப்பு இல்லை. பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள் என்று கூறிக் ெகாண்டிருப்பார்.

இருவரும் காதலித்த சமயத்தில் எனது புரசைவாக்கம் கெல்லீஸ் வீட்டுக்குத்தான் வருவார்கள். பேசிக் ெகாண்டிருப்பார்கள், ெபாழுதைக் கழிப்பார்கள்.

ெவளிநாட்டு என்ஜீனியர் ஒருவரை கிரகலட்சுமிக்கு அவரது பெற்ேறார் பார்த்தனர். அதைக் கேள்விப்பட்டு அதிர்ந்த கிரகலட்சுமி தனக்கு கல்யாணமாகி விட்டதைக் கூறியுள்ளார். ஆனால் அதை அவர்கள் நம்பவில்ைல.

இதையடுத்து பிரசாத் புகைப்படத்தைக் காட்டி இவர்தான் எனது கணவர் என்று கூறினார் கிரகலட்சுமி. இதையடுத்து அவரை வரச் சொல்லி அவமரியாதை செய்து அனுப்பி விட்டனர்.

இதனால்தான் கிரகலட்சுமியிடமிருந்து பிரிந்து விட்டார் வேணுபிரசாத். அதன் பின்னர் அவருக்கு பிரஷாந்த்தைப் பார்த்துள்ளனர். பிரபல நடிகர் என்பதால் இம்முறை கல்யாணத்திற்கு மறுப்பு ெசால்லவில்லை கிரகலட்சுமி.

அவர் செய்த தவறுகளுக்கு இன்று அனுபவிக்கிறார். அவருக்கு சரியான தண்டனை கிடைத்து விட்டது என்றார் அவர்.

கிரகலட்சுமியை பதிவுத் திருமணம் செய்து கொண்டது உண்மைதான் என்று பிரசாத் ஒத்துக் கொண்டு வாக்குமூலம் கொடுத்துள்ளதால், கிரகலட்சுமி மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் மீது நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+