பீர் குடிப்பதில் தென்னிந்தியா சூப்பர்!
புதுடெல்லி: பீர் குடிப்பதில் நாட்டிலேயே தென்னிந்தியர்கள்தான் முதலிடத்தில் உள்ளனர். கடந்த ஆண்டு நாடு முழுவதும் மொத்தம் 13.27 கோடி கேஸ் பீர் விற்பனையாகியுள்ளது. இதில் பெருமளவில் குடித்துக் காலி செய்தவர்கள் தென்னிந்தியர்கள்தான்.
கடந்த 2005-06ம் ஆண்டு 10.43 கோடி கேஸ் பீர்கள் விற்கப்பட்டன. 2006-07ம் ஆண்டு 13.27 கோடி கேஸ் பீர் விற்கப்பட்டு, அதன் மூலம் ரூ.10,000 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
வடஇந்தியாவில் 3.5 கோடி கேஸ் பீர் மட்டுமே விற்கப்பட்டுள்ளது. ஆனால் தென்னிந்தியாவில் தான் பீர் விற்பனை பிய்த்துக் கொண்டு போயுள்ளது. இங்கு மட்டும் 47 கோடி லிட்டர் பீர் விற்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை மதிப்பு ரூ. 4000 கோடி ஆகும்.
இதுகுறித்து அகில இந்திய மதுபான சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், பீர் விற்பனை, ஏல முறையிலிருந்து லைசென்ஸ் முறைக்கு மாற்றப்பட்டதால் ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இதன் விற்பனை அதிகரித்து வருகிறது.
பஞ்சாபில் பாட்டில் ரூ.20க்கும் குறைவாக உள்ளதால் அங்கு 50 சதவீதமும், ஹரியானாவில் 20 சதவீதமும் விற்பனை அதிகரித்துள்ளது என்று கூறினார்.
கடும் வெயில் காரணமாகத்தான் பீர் விற்பனை கிடுகிடுவென அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. தென்னிந்தியா தவிர, ஒரிஸா, மேற்கு வங்கம், டாமன், டையூ மற்றும் சில்வாசா பகுதிகளிலும் அதிக அளவில் பீர் விற்பனையாகியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications