கள்ளக்காதலால் பறிபோன 3 உயிர்கள்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கள்ளக்காதலருடன் தான் இருப்பதை மகள் பார்த்து விட்ட அதிர்ச்சியில் கள்ளக்காதலருடன் பெண் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார். அவர்களைக் காப்பாற்ற முயன்ற அந்த மகளும் தீயில் கருகி இறந்தார்.
ஸ்ரீபெரும்புதூர் டி.கே.நகரைச் சேர்ந்தவர் சாந்தி(42). இவருக்கு இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். சாந்தியின் கணவர் குடிகாரர். கடந்த சில மாதங்களாக கணவரிடமிருந்து விலகி தனித்து வசித்து வருகிறார்.
எம்பிராய்டரி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார் சாந்தி. இந்த நிலையில் சங்கர்(26) என்பவருடன் சாந்திக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து சந்தோஷமாக இருந்துள்ளனர்.
நேற்று சாந்தியின் மகள் ஹேமலதா(18), கல்லூரிக்குப் போய் விட்டு வழக்கத்தை விட சீக்கிரமாகவே வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் சாந்தியும், சங்கரமும் சந்தோஷமாக இருந்ததைப் பார்த்து விட்டார்.
மகள் பார்த்து விட்டாளே என்று வெட்கமடைந்த சாந்தி, தனது கள்ளக்காதலருடன் சேர்ந்து தீக்குளித்தார். தீயில் கருகிய தாயையும், சங்கரையும் பார்த்து அதிர்ச்சியற்ற ஹேமலதா அவர்களைக் காப்பாற்ற முயன்றுள்ளார்.
அப்போது அவரது உடலிலும் தீ பற்றிக் கொண்டது. தீயில் கருகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் 3 பேரையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ஹேமலதா நேற்று இரவே இறந்து போனார். மற்ற இருவரும் இன்று காலை இறந்தனர்.












Click it and Unblock the Notifications