ரூ. 14 கோடியில் அழகாகிறது மெரீனா!
சென்னை:உலகின் 2வது நீளமான கடற்கரை என்ற பெருமை பெற்ற சென்னை மெரீனா கடற்கரையை ரூ. 14 கோடியில் அழகுபடுத்தும் திட்டத்தை சென்னை மாநராட்சி தீட்டியுள்ளது.
உலகின் 2வது நீண்ட கடற்கரை (முதல் கடற்கரை ரியோடி ஜெனீரோ கடற்கரை) என்ற பெருமை சிங்கராச் சென்னையின் மெரீனா கடற்கரைக்கு உண்டு. ஆனால் அந்தப் பெருமையெல்லாம் வெறும் பெயரளவிலேயே உள்ளது.
எங்கு பார்த்தாலும் குப்பை, கடைகளின் ஆக்கிரமிப்பு என மெரீனாவின் கடற்கரை மறைக்கப்பட்டு அசுத்தமாகிக் கிடக்கிறது. இந்த நிலையில், மெரீனாவை அழகுபடுத்தும் திட்டத்தை சென்னை மாநகராட்சி தீட்டியுள்ளது.
கடற்கரைக்குச் செல்ல புதிய பாதைகள், சர்வீஸ் பாதைகள், கண்ணைக் கவரும் புல்வெளிகள், கடற்கரைக்கு வருவோருக்காக அழகான இருக்கைகள் என அமர்க்களப்படுத்த திட்டமிட்டுள்ளது சென்னை மாநகராட்சி. இதற்காக ரூ. 14 கோடியில் புதிய திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரையிலான மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள கடற்கரை அழகுபடுத்தப்படும்.
மேலும் இத்திட்டத்தின் கீழ் தற்போதுள்ள வாகன நிறுத்துமிடம், புல்வெளிகள், நடைபாதைகள், சர்வீஸ் பாதைகள் புதுப்பிக்கப்பட்டு அழகுபடுத்தப்படும். இந்த திட்டத்திற்கான டெண்டர் ஏற்கனவே விடப்பட்டு விட்டது.
கடற்கரை மணலை அசுத்தமில்லாமல் பளிச்சென வைப்பதற்கான திட்டம் தனியாக செயல்படுத்தப்படவுள்ளதாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications